ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு

  |   Nilgirisnews

ஈரோடு, அக்.15: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மலைவாழ் மாணவர்களின் கல்வி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது.1998ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகவும், 2017ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பெரியூர், சுண்டைப்போடு, அக்னிபாவி, செங்குளம், கோயில் நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கடந்த 2 ஆண்டில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. 277 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், தற்போது ஒரு தலைமையாசிரியர், தமிழ் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 தற்காலிக ஆசிரியர்கள் என மொத்தம் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால், இப்பள்ளி மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும், கல்வியாளருமான நடராஜ் கூறியதாவது:...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mnHwrgAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬