ஆர்டர்களை விரைந்து முடிக்க பனியன் தொழிலாளர்களுக்கு 'ஓவர்டைம்'

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 15: தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் ஆர்டர்களை விரைந்து முடிக்க பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஓவர்டைம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் கட்டிங், அயர்னிங், டெய்லரிங், பேக்கிங், செக்கிங், நிட்டிங், சிங்கர், கை மடித்தல், டேமேஜ், அடுக்குதல், லோக்கல் மெஷின் ஆகிய பிரிவுகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் மதுரை, திருச்சி, தேனி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், சிவகங்கை, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்தோடு திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது குடும்பத்தோடு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்போது திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்படும்.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் குறிப்பாக தென்மாவட்ட தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இருந்து இயக்கப்படும். தென்மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விடுவர் என்பதால், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பனியன் நிறுவனத்தில் ஆர்டர்களை முடிக்க ஏதுவாக ஓவர் டைம் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்பதால், ஆர்டர்களை முடிப்பதில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக ஏற்றுமதி பனியன் நிறுவனங்களில் இரவு, பகலாக ஆர்டர்களை முடிக்க உற்பத்தி நடந்து வருகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/33PzVgAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬