இன்றைய தினம் - அக்டோபர் 15

  |   Coimbatorenews

சர்வதேச கிராமப்புற பெண்கள் நாள்

இந்திய அளவில் விவசாயத்தில் அதிகம் ஈடுபடுவது ஆண்கள் அல்ல... பெண்கள். விதைத்தல், களை பிடுங்குதல், அறுவடை செய்தல் என எல்லாவற்றிலும் அவர்களின் பங்குதான் அதிகம். கிராமப்புறப் பெண்களில் 82 சதவிகிதம் பேர் உழைக்கும் வர்க்கத்தினர். குறிப்பாக விவசாயிகள். அத்தகைய கிராமப்புறப் பெண்களுக்கான சர்வதேச தினத்தை இன்று அனுசரிக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

உலகக் கைகழுவும் நாள் (Global Handwashing Day-GHD)

உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்

1931 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015) பிறந்த தினம்...

போட்டோ - http://v.duta.us/V2ZQ2AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2ZPEGQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬