கோட்டை கோயிலில் திருக்கல்யாணம்

  |   Dharmapurinews

தர்மபுரி, அக்.15: தர்மபுரி கோட்டை கோயிலில் வரமகாலட்சுமி பரவாசுதேவ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 7 மணி முதல் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து வந்த சூடிக் கொடுத்த சுடர் கொடி மாலையினை வரவேற்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு வரமகாலட்சுமி பரவாசுதேவ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம், மாலை 6.30 மணிக்கு கருடசேவையும், இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது.

அரூர்: அரூர்கரிய பெருமாள் கோயில், சந்தை மேடு பெருமாள் கோயில், மொரப்பூர் ஸ்ரீசென்னகேசவ பெருமாள் மற்றும் கோபிநாதம்பட்டி பெருமாள் கோயில், மருதிப்பட்டி, ஒடசல்பட்டி, ஆர் கோபிநாதம்பட்டி, ஆகிய கோயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/tcS-YAAA

📲 Get Dharmapurinews on Whatsapp 💬