கள்ளிக்குடி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர்காப்பீடு கிடைக்கவில்லை

  |   Madurainews

மதுரை, அக். 15: கள்ளிக்குடி பகுதியில் 2 ஆண்டுகளாக நெற்பயிர் சேதத்திற்கன பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். மதுரை மாவட்டம், வில்லூர் மற்றும் உவரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் வினயிடம் கொடுத்த புகார் மனுவில், ''நெல் சாகுபடி நடைபெறும் எங்கள் பகுதியில் கடந்த 2017-18ம் ஆணடு முதல் பயிர் காப்பீடு செய்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் போதிய மழை, தண்ணீர் இல்லாத காரணத்தால் நடவு செய்த நெற்பயிர்கள் முற்றிலும் கருகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டது. ஆனால், 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயிகள் இந்தாண்டுக்கான பயிர் செய்வதில் கஷ்டப்படுகின்றனர். மேலும் உரிய காலத்தில் பயிர்காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக கள்ளிக்குடி தாசில்தார் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/m4DLdQAA

📲 Get Madurainews on Whatsapp 💬