சாதனைகளை கூறி காங்கிரசால் ஓட்டு கேட்க முடியவில்லை

  |   Puducherrynews

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று ரெயின்போ நகர், செந்தாமரை நகரில் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டிபிஆர் செல்வம், சுகுமாறன், கோபிகா, வேட்பாளர் புவனேஸ்வரன், அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் கணேசன், சாமிநாதன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். பிரசாரத்தின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்கள்? செய்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி காங்கிரசார் ஓட்டு கேட்க வேண்டும். பொய் பிரசாரம் செய்ய வேண்டிய வேலை எங்களுக்கு இல்லை. அரசு எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/69luFgAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬