சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நடந்து வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பொறியாளர்களுக்கு உத்தரவு

  |   Chennainews

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நடந்து வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும்.அப்போது, தான் மழை காலங்களில் கால்வாய் வழியாக எளிதில் மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.அந்த அறிக்கையின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு 1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு 1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிலத்தில் 10 பணிக்கு 1.76 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு 24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு 47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு 1.55 கோடி என மொத்தம் 51 பணிக்கு 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விட்டு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்தது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணிகளை தொடங்கியது....

போட்டோ - http://v.duta.us/QcVSmgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/voEljAAA

📲 Get Chennainews on Whatsapp 💬