சீமானை கைது செய்யக்கோரி டிஎஸ்பியிடம் காங்கிரசார் மனு

  |   Thoothukudinews

தூத்துக்குடி, அக். 15: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்கு டிஎஸ்.பி.யிடம் காங்கிரசார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் நிர்வாகிகள் எஸ்.பி. அருண் பாலகோபாலனிடம் அளித்துள்ள மனு: விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அவரை தேசிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் பர்னபாஸ், மாநகர் துணைத்தலைவர்கள் பிரபாகரன், பிரபாகர், மண்டல தலைவர் சேகர், ஒ.பி.சி.பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர் பிராங்ளின் ஜோஸ், முன்னாள் கவுன்சிலர் கோபால், மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், தனுஷ், முனியசாமி, சசிபர்னாந்து, ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் முத்துமணி, சந்தானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/PXYRRgAA

📲 Get Thoothukudinews on Whatsapp 💬