திண்டுக்கல்லில் தொடர் கால்பந்து போட்டி

  |   Dindigulnews

திண்டுக்கல், அக். 15: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2019-2020க்கான தொடர் கால்பந்து போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரிமியர் டிவிஷனில் ராக்போர்ட் அணிக்கும், சாசின் சேக்கர் அணிக்கும் நடந்த போட்டியில் 4:0 என்ற கோல் கணக்கில் ராக்போர்ட் அணியும், சோலார் அணிக்கும், அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் அணிக்கும் நடந்த போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் சோலார் கால்பந்து அணியும், காமராஜபுரம் அணிக்கும், லயோலா அணிக்கும் நடந்த போட்டியில் 3:1 என்ற கோல் கணக்கில் காமராஜபுரம் அணியும், சாசின் சேக்கர் அணிக்கும், ஸ்டாலின் அணிக்கும் நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் சாசின் சேக்கர் அணியும் வெற்றி பெற்றது.தொடர்ந்து முதல் டிவிஷனில் செவன் டாலர்ஸ் அணிக்கும், பார்வதி அணிக்கும் நடந்த போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் செவன் டாலர்ஸ் அணியும், பிஎஸ்என்ஏ அணிக்கும், காந்திகிராம் அணிக்கும் நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்என்ஏ அணியும், இரண்டாம் டிவிஷனில் ரமாபிரபா கல்லூரி அணிக்கும், கரிசல் அணிக்கும் நடந்த போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் ரமாபிபா கல்லூரி அணி வெற்றி பெற்றது.இதையடுத்து திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த மூன்றாம் டிவிஷனில் எஸ்எஸ்எம் அணிக்கும், ஏபிசி கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் எஸ்எஸ்எம் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த முதல் டிவிஷனில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணிக்கும், சன் ஸ்போர்ட்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. பின்னர் நான்காம் டிவிஷனில் பிலே ஸ்போர்ட்ஸ் அணிக்கும், தாஸ் சேக்கர்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் பிலே ஸ்போர்ட்ஸ் அணியும், இரண்டாம் டிவிஷனில் சுந்தரம் நினைவு அணிக்கும், ரமேஷ் முருகன் நினைவு அணிக்கும் நடந்த போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் சுந்தரம் நினைவு அணியும், புனித ஜோசப் மில்ஸ் அணிக்கும், புனித ஜோசப் பாலி அணிக்கும் நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் புனித ஜோசப் மில்ஸ் அணியும் வெற்றி பெற்றது என மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Tg6E8AAA

📲 Get Dindigulnews on Whatsapp 💬