திருவாரூர் மாவட்டத்தில் 1லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்

  |   Thiruvarurnews

திருவாரூர், அக்.15: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகமானது நேற்று திருவாரூர் அருகே தண்டலை கிராமத்தில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து கலெக்டர் ஆனந்த் பேசியதாவது, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகமானது இன்று முதல் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது. அதன்படி கால்நடைகளில் பசு மற்றும் எருமை இனம் ஆகியவற்றுக்கு ஏற்படும் இந்த கோமாரி நோய் தடுப்பதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

கால்நடைகளின் கால் மற்றும் வாய் ஆகியவற்றில் ஏற்படும் இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள் ,சினை பசுக்கள், கறவை பசுக்கள் ,எருமைகள் மற்றும் எருதுகள் போன்றவற்றிற்கு தவறாமல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு நோயிலிருந்து ஏற்படும் பொருளாதார இழப்பினை தடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள். அடுத்த மாதம் 12ந் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் கிராம வாரியாக நடைபெறும் இந்த தடுப்பூசி போடும் பணியில் கால்நடைத்துறை சேர்ந்த மருத்துவ குழுவினர் அந்தந்த கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/bkzB4gAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬