பொதுப்பணித்துறை விடுதி வளாகத்தில் நிற்கும் பழுதடைந்த வாகனங்களால் கொசு உற்பத்தி அபாயம்

  |   Kanchipurannews

மதுராந்தகம், அக். 15: மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் உள்ள, பொதுப்பணித் துறை பயணியர் விடுதியில், துருப்பிடித்த சாலை அமைக்கும் இயந்திரங்கள் கொசு உற்பத்தி மையமாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி மற்றும் அலுவலக வளாகம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் மற்றும் அதற்கு தேவையான இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை, மழை, வெயில் போன்றவற்றினால் பாழ்பட்டும் துருப்பிடித்தும் போய் கிடக்கின்றன. இந்த இயந்திரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து செல்லும் உயர்மட்ட கால்வாய்களை அமைக்க சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்பு அந்த இயந்திரங்கள் அப்படியே இங்கு நிறுத்தப்பட்டு வீணாகி பயனற்று கிடக்கின்றன....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/G0ZCTwAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬