பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

  |   Nagapattinamnews

நாகை, அக்.15: நாகை வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளி, ஏடி ஜெயஅம்மாள் நர்சரி மற்றும் மழலையர் பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நடராஜன் தமயந்தி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஏடி ஜெயஅம்மாள் நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். சித்த மருத்துவர் தீபா, பயிற்சி சித்த மருத்துவர் மேகதீபன், ஹோமியோபதி மருத்துவர் சங்கீதா ஆகியோர் டெங்கு நோய் பரவும் விதம், அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நடத்தினர். இதை தொடர்ந்து இலவசமாக நிலவேம்பு மருந்து கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் 15 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் திலகவதி தலைமையில் டாக்டர் குழுவினர் தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடப்பட்டது. ஜேஆர்சி பொறுப்பாசிரியர்கள் ரெங்கபாஷ்யம், சுமதி, சாரண, சாரணியர் பொறுப்பாசிரியர் பரமேஸ்வரன், இளையவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Lh3k1AAA

📲 Get Nagapattinamnews on Whatsapp 💬