மக்கி வீணாகி வரும் மண்புழு தயாரிப்பு கூடம்

  |   Cuddalorenews

நெய்வேலி, அக். 15: நெய்வேலி அருகே உள்ளது பெருமாத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில்இருந்து மண் புழு தயாரிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017 - 2018 கீழ், ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு தயாரிக்கும் கூடம் பெருமாத்தூர் பொது சுகாதார வளாகம் அருகே கட்டப்பட்டது.இந்த மண்புழு தயாரிப்பு கூடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேல் கடத்தும் இதுநாள் வரையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததால் மக்கி வீணாகி வருகிறது. கொட்டகையைச் சுற்றி செடிகள் மற்றும் புதர் மண்டி கிடப்பதாலும், கழி, தென்னை கீற்றுகள் மக்கி விஷ பூச்சிகளின் உறைவிடமாக மாறியுள்ளது. உரக்கிடங்கினுள் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் கொசு உற்பத்தி ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.மக்கள் வரிப்பணம் ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மண்புழு தயாரிப்புக்கூடத்தை செயல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. எனவே இதுகுறித்து குறிஞ்சிப்பாடி கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/6PhewwAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬