மணல் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல்

  |   Puducherrynews

காரைக்கால், அக். 15: காரைக்கால் அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர்களை மாவட்ட வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலில் உள்ள ஆறுகளில் மணல் அள்ள மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி காரைக்காலில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள் மாவட்ட வருவாய்துறையின் அனுமதி இன்றி மணல் அள்ளிவருகின்றனர். இதனை மாவட்ட வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் இருந்துவருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் புகார் அளித்தால் மட்டுமே வருவாய்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். நேற்று முன்தினம் காரைக்கால் அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட ஆறுகளிலிலிருந்து டிராக்டர்களில் மணல் அள்ளுவதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீசாருடன் சென்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன், மணல் அள்ளிய கும்பல் டிராக்டரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து,

4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த வருவாய்துறை அதிகாரிகள், டிராக்டர்கள் யாருக்கு சொந்தமானது, அதில் மணல் அள்ளியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HMw-ewAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬