மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி

  |   Thiruvarurnews

திரு த்துறைப்பூண்டி, அக்.15: திருத்துறைப்பூண்டி வர்த்தகசங்கக் கட்டிடத்தில் மத்தியஅரசின் பல்வகைமாற்றுத்திறன் உடையவர்களுக்கான தேசியநிறுவனத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு மூன்று நாள் மறுவாழ்வு தொடர் கல்விபயிற்சியினை பாரதமாதா மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி நிறுவனர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பாரதமாதா மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர் ரவிந்திரன் வரவேற்றார். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் 30 சிறப்பாசிரியர்களுக்கு சென்னை தேசியநிறுவன மறுவாழ்வு நிபுணர் டாக்டர் தனவேந்தன் கருத்துரை வழங்கி பேசுகையில்: மாற்றுத்திறன் உடையமனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மூளை முடக்குவாதக் குழந்தைகள், புறஉலக சிந்தனைஇல்லாத குழந்தைகள்மற்றும் பல்வகைஊனங்கள்உடைய சிறப்புக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது குறித்தும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வாறுபாதிக்கப்படுகின்றனர்.

அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வது என்றும் இவற்றைசட்டரீதியாகதடுப்பது போன்ற நடவடிக்கைகளால் குழந்தைகளை பாலியல் ரீதியான துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள்நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன், உளவியல் ஆற்றுப்படுத்துனர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாரதமாதா ஒருங்கிணைப்பாளர் லிபின், கார்த்தி ஆகியோர் பயிற்சிக்கானஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் முத்துப்பேட்டை வட்டார வளமையசிறப்பாசிரியர் அன்பரசன் நன்றிகூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/EP29XwAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬