வாக்காளர்களுக்கு கொடுக்க ஆளும்கட்சியினர் பணம் பதுக்கல்

  |   Viluppuramnews

விழுப்புரம், அக். 15: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்

களுக்கு பணம் கொடுக்க ரூ.150 கோடியை ஆளும்கட்சியினர் பதுக்கி வைத்துள்ளதாக விழுப்புரம் ஆட்சியரிடம் கவுதமன் புகார் தெரிவித்துள்ளார்.விக்கிரவாண்டி தொகுதியில் திரைப்பட இயக்குநர் கவுதமன் போட்டியிடுகிறார். நேற்று அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ரூ.150கோடிக்கு மேல் பணத்தை இறக்கியுள்ளனர். ஆளுங்கட்சியினர் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பணநாயகத்தை கட்டவிழ்க்க தயார்நிலையில் உள்ளனர். ஆளுங்கட்சியினர் தொகுதிமக்களுக்கு இப்போதே பணம் கொடுக்க தொடங்கிவிட்டனர். ஜனநாயக படுகொலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. உடனடியாக தொகுதிக்குள் நுழைந்து பதுக்கப்பட்ட பணமூட்டைகளை உடனடி தேடுதல் வேட்டை மூலம் கண்டறிந்து கையகப்படுத்த வேண்டும். இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தால் மட்டுமே மக்களாட்சி இருக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை வரும். அதை தேர்தல்ஆணையம் தான் நமது சட்டப்படி நடவடிக்கைகள் மூலம் காப்பாற்றவேண்டும். எனவே விக்கிரவாண்டி தொகுதிக்குள் ஓட்டுக்கு பணம் கொடுக்க, பதுக்கி வைக்கப்பட்ட பணமூட்டைகளை மாவட்டஆட்சியரும், தேர்தல் மேற்பார்வையாளரும் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/BTC3FwAA

📲 Get Viluppuramnews on Whatsapp 💬