வனத்துறை சார்பில் நடந்த மாநில பேச்சு போட்டியில் பெரம்பலூர் மாணவி முதலிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

  |   Perambalurnews

பெரம்பலூர், அக். 15: சென்னையில் வனத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார். வன உயிரின பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட அளவில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி வனவிலங்கு மோதல்கள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடந்தது.

இதில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி சங்கமித்ரா பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் சென்னை வண்டலூர் வன உயிரின பூங்காவில் மாநில அளவில் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டிகளில் முதலிடம் வென்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேச்சு போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கமித்ரா முதலிடம் பிடித்தார். மாநில அளவில் பேச்சு போட்டியில் முதலிடம் வென்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவி சங்கமித்ராவை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன், மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் ஆகியோர் பாராட்டினார். மேலும் வனச்சரகர் சசிக்குமார், பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் அங்கயற்கண்ணி மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/eHQSvgAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬