🏯அயோத்தி வழக்கு-மாலை ⌚5 மணிக்குள் வாதங்களை🗣 நிறைவு செய்ய உத்தரவு⚖

✍இளவேனில்🌄

🏛உத்தரபிரதேச மாநிலம் 🏯அயோத்தியில் 😳சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், 🏛அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை⚖ எதிர்த்து😡 உச்சநீதிமன்றத்தில், 📜14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சமரச குழுவை 🏛உச்சநீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை🚫. இந்நிலையில், நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, 📆ஆகஸ்ட் 6ம் தேதி முதல் விசாரித்து🗣 வருகிறது. இதுவரை 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் வாதங்களை🗣 முடித்துக் கொள்ள 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு ⌚45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ⌚ஒரு மணி நேரமும் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது😯. அயோத்தி வழக்கில் இன்று மாலை ⌚5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்⚖. அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அயோத்தியில் 144 தடை🚫 உத்தரவு⚖ போடப்பட்டுள்ளது. 📆நவம்பர் 17க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு⚖ வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬