ஆவின் 🚛லாரி உரிமையாளர்கள் அறிவித்த🗣 வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்👍

✍இளவேனில்🌄

கடந்த 📆4 மாதங்களாக 🚛ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கு 💸வாடகைத் தொகை வழங்கப்படவில்லை🚫 என்று கூறப்படுகிறது🗣. இதனையடுத்து சுமார் 💰20 கோடி ரூபாய் அளவிலான வாடகை நிலுவைத் தொகையை கேட்டு 📆அக்டோபர் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக😳 ஆவின் பால் 🚛லாரி உரிமையாளர்கள் 👥சங்கத்தினர் அறிவித்திருந்தனர்🔈. இதனால் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்😨 அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், 🏛சேலம் ஆவின் நிறுவன 🏢அலுவலகத்தில் வைத்து ஆவின் பொது மேலாளர் 🤵விஜய்பாபு தலைமையில் பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, 💪போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬