☔கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து ⌚வினாடிக்கு 💦20,500 கனஅடி தண்ணீர் திறப்பு👍

✍இளவேனில்🌄

🏛கர்நாடக 💦நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் ☔கனமழையின் காரணமாக 🌊காவிரியில் நீர்வரத்து அதிகரித்து⏫ கொண்டே இருக்கிறது. இதனால் 🏛கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது😳. தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அந்த அணையின் இருந்து ⌚வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது😯. அதேபோல 🌊கபினி அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக அதிகரித்து வருகிறது😐. முழு கொள்ளளவான 84 அடியில், தற்போது கபினி அணையின் நீர்மட்டம் 83.5 அடியை கடந்துள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 💦500 கனஅடி வீதம் தண்ணீரானது திறந்துவிடப்படவுள்ளது😦. இதன் காரணமாக 🌊காவிரியில் ⌚வினாடிக்கு 💦20 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரானது தற்போது திறந்து விடப்படுகிறது. இந்த நீரானது அடுத்த 📆2 நாட்களுக்குள் 🏛தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். அவ்வாறு அந்த நீர் வந்தடையும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக அதிகரிக்க⏫ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬