🏛சென்னை மற்றும் 🏛தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை☔

✍இளவேனில்🌄

🏛வடகிழக்கு ☔பருவமழை தொடங்குவதற்கான🎉 அறிகுறியாக 🏛சென்னை மற்றும் 🏛தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது👍. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 2 வது நாளாக காலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது😯. பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு ☔மழை பெய்துவருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி 👥மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்😍. சம்பா சாகுபடி🌾 பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் 😌மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 🏛விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நள்ளிரவு முதல் விடியவிடிய பலத்த மழை கொட்டியது. இதனால் 💦நிலத்தடி நீர்மட்டம் ⏫உயர்வதுடன் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்தொடங்கியுள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது🙂. இன்றுகாலையிலும் ☔பலத்த மழை பெய்து வருவதால் தெருக்களில் 🌊மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬