தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: குழுக்கள் அமைத்து 2 வாரத்தில் அறிக்கை...மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

  |   Chennainews

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசும், இதுபோன்ற மர்மக் காய்ச்சலை தடுக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவார்கள் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. டெங்கு தாக்கம் இருப்பவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது....

போட்டோ - http://v.duta.us/MZhT_gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/FRKj-wAA

📲 Get Chennainews on Whatsapp 💬