🏛தமிழக அரசு 👥ஊழியர்களுக்கு போனஸ்🎉

✍இளவேனில்🌄

அரசு பொதுத்துறை 👥ஊழியர்களுக்கு 🎉தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 🏛தமிழக அரசு அறிவித்துள்ளது📣. அதற்கான செய்திக்குறிப்பில், "🏢பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்🙂" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், "நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் 👥பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்👍" என்றும், "🏛தமிழ்நாடு 🔌மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 🏛அரசு 🚌போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்😯. போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர 👥தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 💸8400 ரூபாயும், அதிகபட்சம் 💸16 ஆயிரத்து 800 ரூபாய் பெறுவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬