தலைநகர் 🏛டெல்லியை சூழ்ந்த புகை😱-அவதியில் 👥மக்கள்😟

✍இளவேனில்🌄

வேளாண் கழிவு புகையால், 🏛டெல்லியை சுற்றியுள்ள குருகிராம், நொய்டா, பரிதாபாத் மற்றும் கஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மிகவும் மாசடைந்து😨 புகைமூட்டமாக போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது😱. குளிர் காலம் என்பதால் 🏛டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, மாநில 👥மக்கள் வைக்கோலை 🔥தீவைத்து குளிர் காய்வதாலும் காற்று மாசுபடுவதாக கூறப்படுகிறது🗣. காற்று தர அட்டவணைப்படி📜 காற்றின் மாசு அளவு, 0 முதல் 50 புள்ளிகள் வரை நல்ல நிலை, 51 முதல் 100 வரை திருப்தியளிக்க கூடிய நிலை, 101 முதல் 200 வரை மிதமான நிலை, 201 முதல் 300 வரை மோசமான நிலை, 301 முதல் 400 வரை மிக மோசமான நிலை மற்றும் 401 முதல் 500 வரை தீவிரமான மாசு நிலை என வரையறுக்கப்படுகிறது😯. அதன்படி, இன்று மேற்கொண்ட ஆய்வில்👀, டெல்லி நகரம் முழுவதும் 309 புள்ளிகள் காற்று மாசின் தரம் இருந்துள்ளது. ⏫அதிகபட்சமாக துவாரகா பகுதியில் 480 புள்ளிகளுடன் தீவிரமான காற்று மாசு உள்ளது😳 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 🏛டெல்லியை ஒப்பிடும் போது மற்ற பெரும் நகரங்களான 🏛கொல்கத்தா, 🏛மும்பை, 🏛சென்னையில் காற்று மாசு குறைவாகவே⏬ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : dinamalar