👩மகளிர் சுய 👥உதவிக்குழுக்கள் செயல் இழந்துவிட்டது😟-மு.க.ஸ்டாலின்🎙

✍இளவேனில்🌄

🌞திமுக தலைவர் முக.ஸ்டாலின், 🏛நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி 🗳இடைதேர்தலில் போட்டியிடும்🎉 காங்கிரஸ் வேட்பாளர் 👤ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் திண்ணைப் பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்🎙, "அடிப்படை வசதியில்லாமல் 🏛தமிழகம் முழுவதும் 👥மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்😟. உள்ளாட்சி 🗳தேர்தல் நடத்தாததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை🚫" என்று 😡குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் 👩மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் இழந்துவிட்ட நிலையில்🙄, கடன்💸 கேட்டு 🏦வங்கிக்கு சென்றால் விரட்டியடிக்கபடுவதாகவும்😳 மு.க.ஸ்டாலின் பேசினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬