மீண்டும் 🇮🇳இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 🛩ஆளில்லா விமானம்😨

✍இளவேனில்🌄

கடந்த 📆ஒரு வாரத்திற்கு முன் 🏛பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு அருகே ஒரு ஆள் இல்லா 🛩விமானம் காணப்பட்டது👀. ஒரு வாரத்திற்குப் பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு ஆள் இல்லா விமானத்தை பஞ்சாபின் எல்லைக்கு அருகில் வசிக்கும் கிராம 👥மக்கள் கண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 📆திங்கட்கிழமை இரவு பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானம் ஒன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லை கிராமங்களான 🏛ஹசாரா சிங் வாலா மற்றும் 🏛பக்டி ஆகிய இரு கிராமங்களில் பறந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது😳. நேரில் பார்த்த 👥உள்ளூர்வாசிகள் கூறுகையில்🎙, "ஆள் இல்லா 🛩விமானம் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை 🇮🇳இந்திய வான் வெளியில் நுழைந்தது🙄. இதனையடுத்து எல்லை 💪பாதுகாப்பு படை 🏯கோபுரத்திற்கு அருகிலும், சட்லெஜ் 🌾நெல் வயல்களிலும் பறந்து கொண்டிருந்தது. பின்னர் அது எல்லையைத் தாண்டியது😱, மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை🚫" என்று கூறினர். இதற்கிடையே, 👮போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையைத் நடத்தினாலும் அந்த ஆள் இல்லா விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை🙄 என்று கூறப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬