அட்வான்ஸ், சரண்டர் பணம் தராததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  |   Nilgirisnews

ஊட்டி, அக்.17: ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த 36 வார்டுகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், நாளடைவில் அவர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது நிரந்தர பணியாளர்கள் 180 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் காலை 6 மணிக்கு நடுங்கும் குளிர் என்றாலும், பனி என்றாலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள 36 வார்டுகளுக்கும் செல்கின்றனர். அங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. துவக்கத்தில் இவர்களுக்கு குப்பைகளை அள்ளும் பணிகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், குப்பைகளை மூன்று வகையாக பிரித்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் இவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன் அட்வான்ஸ் தொகை மற்றும் சரண்டர் பணம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/AWBzkAAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬