அதிமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அவை எவற்றையும் நிறைவேற்றுவதில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

  |   Chennainews

சென்னை: அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இப்படி வெற்றி பெறுவதன் மூலமே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதோடு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த 2015-ல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகும் என உறுதி கூறப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/2bR6JAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/KIDfFAEA

📲 Get Chennainews on Whatsapp 💬