அரசு அலுவலகங்களை சுத்தமாக பராமரித்து அறிக்கை தர வேண்டும்

  |   Madurainews

மதுரை, அக். 17: அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரித்து 3 நாளில் அறிக்கை தர வேண்டும் என கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். துரை கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், 'தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கயுள்ள நிலையில் மழையின் காரணமாக தேங்கியுள்ள நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏதும் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தக்கொள்வதற்கு எடுத்துக்காட்டாக அரசு அலுவலங்களில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, மாநகராட்சி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். இதனை 3 நாளில் செய்து முடித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகை, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்கள் முற்றிலும் பயன்படுத்தக்கூடாது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/jmvxbgAA

📲 Get Madurainews on Whatsapp 💬