இந்திய தேசிய கொடி-யின் விதிமுறையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

  |   Coimbatorenews

இந்திய தேசியக் கொடி, ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும், 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு.

கொடியை உருவாக்கியவர்அசோக சக்கரம், கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில், நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.

வாழ்வை குறிக்கும் சக்கரம்அசோக சக்கர சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறி செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். தேசியக் கொடியின் காவி நிறம், துாய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படுகிறது....

போட்டோ - http://v.duta.us/ESp-9QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/bVo02AEA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬