இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை கண்டித்து எல்ஐசி முகவர்கள் தர்ணா

  |   Thanjavurnews

தஞ்சை, அக். 17: இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை கண்டித்து தஞ்சையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். கோட்ட தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். தென்மண்டல குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி நிறைவுரையாற்றினார்.

போராட்டத்தில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. எல்ஐசி பாலிசி பிரீமியம் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். 1.1.2014க்கு பின் உள்ள பாலிசிகள் காலாவதியானதை புதுப்பித்தல் காலம் 2 ஆண்டை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். குழு காப்பீட்டு வயது வரம்பை தளர்த்தி காப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். கிராஜூட்டி கணக்கீட்டு முறையை மாற்றி ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். எல்ஐசி முகவர்களுக்கு பென்ஷன் திட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/fRItigAA

📲 Get Thanjavurnews on Whatsapp 💬