இளம்பெண்ணிடம் ₹18 ஆயிரம் அபேஸ்

  |   Namakkalnews

தம்மம்பட்டி, அக்.17: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சுபா(30). இவர், தனது மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக வங்கியில் இருந்து ₹18 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது தந்தையுடன் டூவீலரில் நடுவீதி வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெரியசாமி எதிரே வந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், பின்னால் ஸ்கூட்டரில் வந்த இருவர், 100 ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக சுதாவிடம் கூறியுள்ளனர். அதனை எடுத்துக்கொண்டு, வீடு திரும்பிய சுபா பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த ₹18 ஆயிரம் மாயமாகியிருப்பது கண்டு திடுக்கிட்டார். அதனை ஸ்கூட்டரில் வந்த மர்ம ஆசாமிகள், கவனத்தை திசை திருப்பி திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து நூதன முறையில் பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியரிடம் ₹2 லட்சம் அபேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HfXcKgAA

📲 Get Namakkalnews on Whatsapp 💬