உணவு பொருட்களில் கலப்படம் அனைவரும் விழிப்புணர்வு தேவை

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 17: உலக உணவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் உலக உணவு தினவிழா திருப்பூர் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளி ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளி கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது: இன்று (நேற்று) உலக உணவு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் கிடைக்கும் உணவு சரிவிகிதத்திலும், சத்தானதாகவும் அமைய வேண்டும். நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் நம்மை யார் என்று அடையாளம் காட்டுகிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வதுடன், நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Iv7GJwAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬