உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் பட்டியல் தயாரிப்பு

  |   Tiruvallurnews

திருவள்ளூர், அக். 17: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்ய வேண்டிய அலுவலர் பட்டியல் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில், கடந்த 2016 அக்டோபரில் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல், பல்வேறு காரணங்களால் இதுவரை நடத்தப்படவில்லை. நீதிமன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகளால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தற்போது மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு விட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், சொந்த ஊரில் பணியாற்றுபவராக இருந்தாலும், இட மாறுதல் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இட மாறுதல் செய்வதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் பி.டி.ஓ., பொறியாளர், ஓவர்சீயர் பட்டியலும், சொந்த வட்டாரத்தில் பணியாற்றும் அலுவலர்கள் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில், ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர், தேர்தல் அலுவலர்களாக இருப்பர். இவர்களில், தேர்தல் விதிகளின்படி, மாறுதல் செய்ய வேண்டியவர்களின் பட்டியலும் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/04qp-AAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬