உழைப்பாளிகள் நிறைந்த நாங்குநேரி தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்யும் கட்சி அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

  |   Tirunelvelinews

களக்காடு, அக். 17: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்களது வழியில் தற்போதும் அதிமுக பொதுமக்கள் விரும்பும் வகையில்தான் செயல்படும். மக்களுக்கு தேவையானதை செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து களக்காடு ஒன்றிய பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வீடு, வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர் களக்காடு ஒன்றியம் மீனவன்குளம் கிராமத்தில் கொட்டும் மழையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது: நாங்குநேரி தொகுதி உழைப்பாளிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. உழைப்பாளிகள் விரும்பும் கட்சியான அதிமுக நிச்சயம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பாடுபடும். 2 நாட்களாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பிறகு நாங்குநேரி தொகுதியில் மிகப்பெரிய மாற்றங்கள் எழுந்துள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Qd-_fwAA

📲 Get Tirunelvelinews on Whatsapp 💬