கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன் உலர் தளம் அமைக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு

  |   Pudukkottainews

மணமேல்குடி, அக்.17: நாகை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்களை காய வைக்க உலர்தளம் இல்லாததால் மணலில் காய வைக்கின்றனர். எனவே இப்பகுதிகளில் உடனடியாக மீன்பிடி உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மீன்கள் மற்றும் இறால்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில் வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கி சென்றனர். விசைப்படகில் வரக்கூடிய இறால் மற்றும் பெரிய வகை மீன்கள் அனைத்தும் விற்பனையாகின்றன. மீனவர்களின் வலையில் சிக்கும் டன் கணக்கில் உள்ள சிறிய வகையான மீன்கள் கடலோரப் பகுதிகளில் காய வைக்கப்பட்டு கருவாடாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி காய வைக்கப்படும் மீன்களுக்கு என்று தனியாக உலர்தளம் இல்லாததால் கடலோரப் பகுதிகளில் உள்ள தரைப்பகுதிகளிலும் மற்றும் மணல் பகுதிகளிலும் காய வைக்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடுமையான காற்றினால் மணல் ஒட்டிக்கொள்கிறது. மழை நேரங்களில் தரையானது சேரும் சகதியாக மாறுகிறது. மழை நேரங்களில் காய வைக்கும் போது மழையில் நனைந்து வீணாகிறது. இதனால் மீனவர்களுக்கு பல ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதிகளில் மீன்களை காயவைக்க உலர்தளம் ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/OCN_ngAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬