கட்டுமான பணி நடக்கும் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

  |   Erodenews

ஈரோடு, அக்.17: ஆபத்தை உணராமல் கட்டுமான பணி நடைபெறும் வகுப்பறையிலேயே மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தும் அவலம் கொங்காடை மலைப்பள்ளியில் நடந்து வருகிறது. அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை கிராமம் உள்ளது. இங்கு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளியாக இருந்தது, தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் 277 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்விநிலை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், தற்போது மாணவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணி கடந்த சில மாதமாக நடந்து வருகின்றது. இக்கட்டிடத்தில் கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் முட்டு பிரிக்காமல் அப்படியே உள்ளது. பூச்சு வேலை, தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆபத்தை பற்றி உணராமல் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவலநிலை இருந்து வருகிறது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2tIMCgAA

📲 Get Erodenews on Whatsapp 💬