கொட்டாம்பட்டி அருகே வக்கீல் கொலை வழக்கில் கூலிப்படையினர் 4 பேர் கைது

  |   Madurainews

மேலூர், அக். 17: கொட்டாம்பட்டி அருகே அமமுக செயலாளரும், வக்கீலுமான காதர்ஷா கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொட்டாம்பட்டி அருகில் உள்ள உதினிப்பட்டியை சேர்ந்தவர் கமருதீன் மகன் காதர்ஷா (38). வக்கீலான இவர் அமமுக கட்சியின் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலராகவும் இருந்து வந்தார். இவர் அடிக்கடி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சென்று வருவது வழக்கம்.கடந்த அக்.4ம் தேதி இரவு இவர் சிங்கம்புணரி சென்று விட்டு தனது டூவீலரில் உதினிப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பலால் இவர் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக நேற்று முன்தினம் உதினிப்பட்டியை சேர்ந்த காதர் மைதின் மகன்கள் ராஜாமுகமது (40), ரியாஸ் அகமது (43), காதர்மைதின் தம்பிகள் செல்லக்கண்ணு (64), சக்ரவர்த்தி (58), இப்ராஹிம் ஒலி (54) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/iQY1dwAA

📲 Get Madurainews on Whatsapp 💬