கந்தர்வகோட்டையில் மாணவர்கள் விடுதியில் டெங்கு ஒழிப்பு பணி

  |   Pudukkottainews

கந்தர்வகோட்டை, அக்.17: கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அறந்தாங்கி துணைஇயக்குனர் சுகாதார பணிகள் சார்பாக புதுநகர் வட்டார மருத்துவர் சந்தோஷ் தலைமையில் இரண்டு குழுக்களாக புதுநகர் மற்றும் கோமாபுரத்தில் ஒரு குழுவினரும், கந்தர்வகோட்டையில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் மற்றொரு குழுவினரும் மருத்துவ முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

புதுநகர் மற்றும் கோமாபுரத்தில் மருத்துவர் சசிவர்மன் சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், பழனிச்சாமி விடுதி காப்பாளர்கள் சக்திவேல், புஷ்பராஜ் ஆகியோரும், கந்தர்வகோட்டையில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் மருத்துவர் விண்ணரசி, சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, நல்லதம்பி விடுதி காப்பாளர்கள் வீரப்பன், செந்தமிழ்செல்வி கலந்து கொண்டனர். முகாம்களில் மாணவ, மாணவிகள் 212 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 மாணவர்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. குடிதண்ணீரில் குளோரின் கலந்து கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. கை கழுவும் முறை கற்றுத்தரப்பட்டது. தன்சுத்தம் பேணுதல் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து பகுதியிலும் கொசுக்களை ஒழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/RpIDIwAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬