கேப்டன் எஸ்.பி. குட்டிக்கு பாராட்டு விழா

  |   Kanyakumarinews

நாகர்கோவில்: அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் கீதைசித்தர் கேப்டன் எஸ்.பி. குட்டி - ரோகிணிபாய் சதாபிஷேக விழா, அவருடைய 60 ஆண்டு கால தேச பணியை பாராட்டும் விழா, காஷ்மீரில் 370 பிரிவை நீக்கிய மகிழ்ச்சி விழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமையில் ராஜகோகிலம் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தலைவர் பாரத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமி கார்த்திகானந்தஜி மஹராஜ், சுவாமி வேதநிஷ்டானந்தஜி மஹராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நினைவு பரிசு, வீரவாள் மற்றும் பாரதமாதா சிலை ஆகியவற்றை வழங்கினர். மேலும் ஓய்வு பெற்ற சி.இ.ஓ. ரத்தினசாமி, இந்து பூமி ஆசிரியர் முருகேசன், அகில பாரத சேவா பிரமுகர் சுந்தரலெட்சுமணன், வக்கீல் தங்கசாமி, சிவாஜி, இந்து முன்னணி பொறுப்பாளர் அசோகன் மற்றும் இந்து மகாசபா பொறுப்பாளர் கோவை செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழா நிகழ்ச்சிகளை திவாகரன் தொகுத்து வழங்கினார். சிவபாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை அறிவுசார் ஆன்மீக கல்விக்கழக மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ciLmPgAA

📲 Get Kanyakumarinews on Whatsapp 💬