காமராஜர் நகர் இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

  |   Puducherrynews

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜான்குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவையில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (17ம்தேதி) மாலை 4 மணி முதல் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் தென்றல் நகர், ஆட்டோ ஸ்டாண்டு, புறாகுளம் சந்திப்பு, ரெயின்போ நகர் சந்திப்பு- பிரெஞ்சு கார்னர் சந்திப்பு, கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு தெரு சந்திப்பு, சாமிபிள்ளை தோட்டம்- காமராஜர் நகர் மணிமண்டபம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக எந்தெந்த பகுதிகளில் யார், யார் வரவேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பில் நமது கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்கிறார்கள். எனவே திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/KYL5XwAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬