கலெக்டர் பேட்டி கரூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

  |   Karurnews

கரூர், அக்.17: கரூர் அருகே முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல்,சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை வெல்லம் தயாரிப்பதற்காக விற்பனை செய்கின்றனர். டன் கரும்பு ரூ.2400வரை விற்பனை செய்யப்படுகிறது.கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் எந்திரத்தின் மூலம் சாறுபிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றிகாய வைத்து சரியான பதம்வந்து பாகு ஆனவுடன் மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலரவைத்து அச்சு வெல்லம் தயாரிக்கின்றனர்.

மேலும் மரத்தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலரவைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இவை உலர வைக்கப்பட்டு 30கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்து வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இங்கிருந்து வெல்லம் வாங்கி ஆந்திரா,கேரளா, கர்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் வெல்லம் அனுப்பப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி பலகாரங்கள் தயாரிக்க வெல்லம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வெல்லம் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/-2FywwAA

📲 Get Karurnews on Whatsapp 💬