காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

  |   Chennainews

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் அக். 24ல் வெளியாகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அது மட்டுமின்றி நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும்- சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்....

போட்டோ - http://v.duta.us/SyRaBQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/tuRKtwAA

📲 Get Chennainews on Whatsapp 💬