கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

  |   Sivaganganews

சிவகங்கை, அக்.17: மானாமதுரை அருகே நீர் வரத்து கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி மூன்று கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: மானாமதுரை அருகே கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம் கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இப்பகுதி கிராமங்களுக்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். எங்கள் கிராமங்களின் கண்மாய்களுக்கு வைகையில் இருந்து கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்து வருகிறோம்.இந்நிலையில் இந்த கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட முயற்சி செய்யப்படுகிறது. விவசாய நிலங்களை பிளாட் போட வணிக நோக்கத்தில் இப்பகுதியில் பாலம் கட்ட முயற்சிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை, பேலீசார், வருவாய்த் துறை மூலம் அமைதி பேச்சுவார்த்தை நடடைபெற்றது. ஆனால் இதுபோன்ற கிராமத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றுள்ளனர். இங்கு பாலம் அமைப்பதால் கண்மாய்க்கு வரம் நீரின் அளவு குறையும்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/twiFJQAA

📲 Get Sivaganganews on Whatsapp 💬