குளம்போல் காட்சியளிக்கும் அரசு போக்குவரத்து பணிமனை காரைக்குடியில்தான் இந்த கஷ்டநிலை

  |   Sivaganganews

காரைக்குடி, அக். 17: காரைக்குடி அருகே அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் குளம்போல் தேங்கியும், சேறும், சகதியுமாகவும் காணப்படுவதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காரைக்குடி அருகே மானகிரி செல்லும் வழியில் கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை (எஸ்இடிசி) துவங்கப்பட்டது. பணிமனை துவங்க அப்போது ரூ.99 லட்சத்துக்கு மேல் ஒதுக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதிக்கு 29 பஸ்கள் இயக்கப்படுகிறது. பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பஸ் பழுதுபார்க்கும் பகுதி உள்பட சில முக்கிய பகுதிகளில் மட்டும் செட் அமைக்கப்பட்டு தளம் போடப்பட்டுள்ளது.ஆனால் பஸ்நிறுத்தும் பகுதியில் சிமென்ட் தளம் அமைக்காமல் 4 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போட்டுள்ளனர். சிமென்ட் தளம் இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.சேறும், சகதியாக உள்ள இப்பகுதியில் பஸ்சை நிறுத்திவிட்டு எடுத்து செல்லும் போது பஸ்களிலும் சேறு படிந்து காணப்படுகிறது. மேலும் பணியாளர்களும் பணிமனைக்கு உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் சிமென்ட் தளம் அமைக்க போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/0KLI2QAA

📲 Get Sivaganganews on Whatsapp 💬