கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

  |   Ramanathapuramnews

திருவாடானை, அக்.17: திருவாடானையில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மழை தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளில் புகுந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. திருவாடானை வளர்ந்து வரும் நகர் பகுதியாகும்/ இன்னும் ஊராட்சி அந்தரத்திலே இருந்து வருகிறது/ இதனால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய இயலவில்லை. பொதுமக்கள் சார்பில் திருவாடானை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்பட வில்லை. திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் மழைத்தண்ணீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. சில இடங்களில் கால்வாய் அமைக்கவும் இல்லை. வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி ஆகிய இடங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இவைகள் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளை விரிவுபடுத்தி விட்டனர். இதனால் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது. சன்னதி தெரு மேல ரதவீதி ஆகிய இடங்களில் கால்வாயை அமைக்கப்பட வில்லை. நேற்று மதியம் பெய்த மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே நான்கு ரத வீதிகளிலும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாய் இல்லாத இடங்களில் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/kB0ENgAA

📲 Get Ramanathapuramnews on Whatsapp 💬