கோவையில் பள்ளி மாணவா்களுக்கான தேசிய கலை, இலக்கியப் போட்டிகள் கொடிசியாவில் சனிக்கிழமை தொடங்குகிறது

  |   Coimbatorenews

கோவை கொடிசியா அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் வரும் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

எலைட் சா்க்கிள் என்ற அமைப்பு சார்பாக ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவா்களுக்கான தேசிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தவருடம் 20-வது ஆண்டாக 19 ஆம் தேதி (சனிக்கிழமை) கோவை கொடிசியா அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்து 600 பள்ளிகளைச் சோ்ந்த 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த போட்டியில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கட்டுரைப் போட்டிகள், திருக்குறள் ஒப்பித்தல், குழு நடனம் உள்பட பல்வேறுப் பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறுபவா்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மொத்தம் 250 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். என எலைட் சா்க்கிள் நிறுவனத்தின் செயலாளா் பி.பாலசுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

போட்டோ - http://v.duta.us/efAhJQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/lJTshwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬