காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்

  |   Tiruchirappallinews

திருச்சி, அக்.17: காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை மாநாடு புத்தூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், துணை செயலாளர் இந்திரஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், உய்யக்கொண்டான் ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் பிரசன்னாவெங்கடேஷ், திராவிடமணி, பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் 'அனைத்து வங்கிகள் மற்றும் தனிநபர்களிடம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி விவசாயிகளின் கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய (கிஷான் சமான்) திட்டத்தில் பிரிமிய தொகை பெறாமல் 60 வயதான ஆண், பெண் விவசாயிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விவசாய பணிகளுக்கு கேசிசி கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் நகைக்கடன் நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஏற்கனவே வழங்கி வந்த 3 சதவீதம் மானியத்துடன் நகைக்கடன் வழங்க வேண்டும். காவிரி கொள்ளிடத்தில் மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/4bWajgAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬