கோவை அன்னூரில் இதயம் வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி

  |   Coimbatorenews

கோவை காட்டம்பட்டி கதிர்வேல் ( பண்ணாரி அம்மன் டிரான்ஸ்போர்ட்ஸ் ) என்பரவது அப்பா ஆடு மேய்ப்பவர்..

கோவை அன்னூர் பகுதியில் காட்டம்பட்டி கிராமத்தில் கதிர்வேல் (பண்ணாரி அம்மன் டிரான்ஸ்போர்ட்ஸ் ) என்பவரது தந்தை ஈஸ்வரன் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார், வளர்த்து வரும் ஒரு ஆடு நேற்று காலை 11 மணி அளவில் இரண்டு குட்டிகளை ஈன்றது, அதில் அந்த குட்டியின் இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி இருந்தது. ஆனாலும் அந்த ஆட்டுக்குட்டியின் இதயம் நன்றாக துடித்துக்கொண்டு இருந்தது.

இதனை பொதுமக்கள் அதிசயித்து பார்த்தனர், ஈஸ்வரன் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார், விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் அந்த ஆட்டுக்குட்டியை பார்த்தனர். இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை செய்து இதயம் மற்றும் இரைப்பையை அந்த ஆட்டுக்குட்டியின் உடலுக்குள் வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த ஆட்டுக்குட்டிக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை மூலம் இதயம், இரைப்பை ஆகியவற்றை உடலுக்குள் வைத்து சாதனை படைத்தனர். தற்போது அந்த ஆட்டுக்குட்டி நலமாக உள்ளது.

போட்டோ - http://v.duta.us/Z9ciRgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/WWYczwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬