கோவை தந்த மாணிக்கம் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் நினைவு தினம் இன்று

  |   Coimbatorenews

இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.

ஆர். கே. சண்முகம் செட்டியார் பொது வாழ்க்கை

இந்திய சுயாட்சிக்காக சண்முகம் செட்டியார் அவர்கள், தமது கருத்துகளை பல பொதுக் கூட்டங்களில் வெளியிட்டுள்ளார், அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். கோவை நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1923 முதல் 1929 வரை வரை, மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். 1929ல் பன்னாட்டு தொழிலார்கள் நிறுவன மாநாட்டில் இந்திய பிரதிநிதியாகவும் கலந்து கொண்டார். மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக பணியாற்றிய பிறகு, இவர் அந்த அவையின் துணைத்தலைவராக 1931- ல் பதவியேற்றார். துணைத்தலைவர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1933-ல் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்த அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் நிர்வாக முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமையையும் பெற்றார். 1944-ல் பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்....

போட்டோ - http://v.duta.us/Qz5ZRgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/t2h94wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬